மின்வெட்டு: மதுரையில் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
மதுரை: மதுரை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டு காரணமாக சிறு, குறு தொழிலை நம்பியிருந்த சுமார் இரண்டு லட்சம்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நான்கு இடங்களில் தொழிற்பேட்டைகள் உள்ளன. அவற்றில் உறங்கான்பட்டி, கப்பலூர், கோ.புதூர், சமயநல்லூர் அருகில் உள்ள நகரி பகுதிகளில் சிறு, குறுந்தொழில்களில் சுமார் 40,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மதுரை நகரில் கார்மெண்ட்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விசைத்தறிக் கூடங்கள், ஆட்டோ மொபைல் உதிரிப்பாகங்கள், ரப்பர் பொருட்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல், சிறு விசைத்தறிகள், சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிப்பு போன்ற தொழில்களில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக இந்த தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில், ஐந்தரை மணிநேரமே மின் வெட்டு நீடிக்கும் என்று அரசு அறிவித்தும் கூடுதலாக மூன்று நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் சுமார் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
உற்பத்தி சதவீதமும் 40 முதல் 50 சதவீதம் வரை தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறு தொழிலில் நாள் ஒன்றிக்கு சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்று சிறு - குறு தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications