சட்டீஸ்கர், மபி, டெல்லி, ராஜஸ்தான் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

சட்டீஸ்கரில் வரும் நவம்பர் 14ம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் 25ம் தேதியும், டெல்லி சட்டசபைக்கும், மிசோரத்திலும் 29ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
ராஜஸ்தானில் டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை டிசம்பம் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் கலைக்கப்பட்ட ஜம்மூ-காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன் நடக்கவுள்ள இந்த 4 மாநிலத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கான முன்னோட்டமாக இருக்கப் போகின்றன.
மிசோரம் தவிர்த்த 4 மாநிலங்களிலும் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி மோதல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இரு கட்சிகளுக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தலைவலியாக இருக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications