இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களைக் காக்க ரூ.20,000 கோடி
மும்பை: இந்திய வங்கித் துறையில் ரொக்கப் புழக்கத்தை மேலும் சகஜமாக்கவும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் நெருக்கடியைத் தளர்த்தவும் ரூ.20,000 கோடியை வழங்குகிறது ரிசர்வ் வங்கி.
இதுகுறித்த தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
தங்களிடம் உள்ள பிணையச் சொத்துகளை மீண்டும் ரொக்கமாக்குவதில் ஏற்படுகிற சவால்தான் இன்றைக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது.
இன்றைக்கு பிணையமாக உள்ள சொத்துக்களின் நிகர மதிப்பு, முன்பு அவற்றின் மீது வழங்கப்பட்ட கடன்களை விட குறைவாக மாறி வருகிறது (இதானே அமெரிக்க வங்கிகளின் பிரச்சினையும்!). அதே நேரம் ரொக்கத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இருக்கும் சொத்துக்களை வந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம். இதுவே பெரும் நெருக்கடிக்கு அந்த நிதி நிறுவனங்களை இட்டுச் செல்கிறது. கையில் போதிய ரொக்கப் புழக்கம் இருந்தால், அவசரப்பட்டு சொத்துக்களை நிர்பந்தம் இருக்காது.
இந்தியாவில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதியைக் கையாளும் வணிக வங்கிகளின் பிரச்சினையும் இதுதான். இதைத் தீர்க்கத்தான் இந்த குறுகிய கால நிதி உதவியை வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த அறிவிப்பைப் பெரிதும் வரவேற்றுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். யுடிஐ பரஸ்பர நிதியின் தலைமை விற்பனை அதிகாரி ஜெய்தீப் பட்டாச்சார்யாவும் இந்த அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தை 1.5 சதவிகிதம் வரைக் குறைத்து சந்தையில் கூடுதலாக ரூ.60,000 கோடி வரை பணப்புழக்கம் அதிகரிக்க வகை செய்த்து ரிசர்வ் வங்கி என்பது நினைவுகூறத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications