பொருளாதாரம்: பால் க்ரூக்மேனுக்கு நோபல் பரிசு!

Subscribe to Oneindia Tamil

Paul Krugman
ஸ்டாக்ஹோம்: இவ்வாண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கப் பொருளாதாரா நிபுணர் பால் க்ரூக்மேனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10- ஆம் தேதி ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படும்.

உலக மயமாக்குதலின் விளைவுகள், தனியார்மயம் மற்றும் தடையில்லா வர்த்தகம், உலக நாடுகளின் நகரமயமாக்கல் பிரச்சினை போன்றவற்றுக்கு தனது புதிய சிந்தனைகளால் தீர்வு சொன்னவர் க்ரூக்மேன்.

இந்தக் கருத்துகள் பல வெறும் கோட்பாடுகளோடு நின்றுவிடாமல் நடைமுறைக்கு ஏற்றவையாக உள்ளதால் இப்பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக நோபர் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

55 வயதாகும் பால் க்ரூக்மேன், அமெரிக்காவில் உள்ள லாங் தீவில் பிறந்தவர். யூத இனத்தைச் சேர்ந்தவர். பிரபல யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டமும், மாசசூட்ஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்துக்கான டாக்டர் பட்டமும் பெற்றவர்.

இப்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டோன் பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறைத் தலைவராக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+