கன்னியாஸ்திரி பலாத்காரம்: கைதிகள் ஒரிஸ்ஸா பயணம்
கோவை: ஒரிஸ்ஸா மாநிலத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோவையிலிருந்து விமானம் மூலம் ஒரிஸ்ஸா கொண்டு சென்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்தா நக்ஸலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் மதக் கலவரம் வெடித்தது.
தேவாலயங்கள் மற்றும் கிருஸ்தவ நிறுவனங்கள் மீது விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவற்றைத் சேர்ந்தவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர்.
அப்போது கந்தமால் மாவட்டம் நவுசான் கிராமத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பாலக்காடு அருகே உள்ள கிழக்கஞ்சேரியில் ரைஸ் மில்லில் வேலை செய்த மிதுபட்நாயக் (25) சரோஜ் கடேய் (42) முன்னா கடேய் (22) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளத்தில் பணியாற்றி வரும் இந்த மூவரும் சம்பவம் நடந்தபோது ஒரிஸ்ஸாவில் இருந்தனர். மதக் கலவரத்தை பயன்படுத்தி கற்பழிப்பில் ஈடுபட்டுவிட்டு தப்பி கேரளாவுக்கு வந்துவிட்டனர்.
நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் கேரளத்தில் வைத்து இவர்க் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரும் பாலக்காடு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு அங்கிருந்து விமானம் மூலம் ஒரிஸ்ஸா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த கைதிகளை கோவை விமான நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். ஆனால் கைது செய்யப்பட்டதற்கான வாரண்ட் இல்லாததால் விமானத்தில் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து மூவரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் உரிய வாரண்ட் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மூன்று பேரும் முகத்தை மூடியபடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து பெங்களூர் வழியாக ஒரிஸ்ஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications