கனடா- ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி
டோராண்டோ:கனடாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தி்ல் மொத்தமுள்ள 308 இடங்களில் ஆட்சியமைக்க 155 இடங்கள் தேவை என்ற நிலையில், 143 இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி வென்றுள்ளது. இருப்பினும் அந்தக் கட்சி ஆட்சியமைக்க எந்த சிரமமும் இல்லை. அதே நேரத்தில் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற பிற கட்சிகளின் ஆதரவு தேவை.
முக்கிய எதிர்க் கட்சியான இடதுசாரி லிபரல் கட்சி சுற்றுச்சூழலை முன் வைத்து தேர்தலில் பிரச்சாரம் செய்தது. சூழலைக் காக்க கார்பன் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. அதுவே அந்தக் கட்சிக்கு பெரும் எதிரியாய் அமைந்துவிட்டது.
லிபரல்கள் ஆட்சிக்கு வந்தால் வரிச் சுமை அதிகரிக்கும் என்ற ஹார்பரின் வாதம் வென்றுள்ளது. மேலும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சூறாவளியால் அண்டை நாடான கனடா பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அந்த அளவில் தனது நாட்டு பொருளாதாரத்தை ஓரளவுரக்கு கட்டுக்கோப்பாகவே வைத்திருந்தார் ஹார்பர். இதுவும் அவரது மறு வெற்றிக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications