அத்வானிக்கு கார் ஓட்ட தடுக்கப்பட்ட முஸ்லீம் போலீசார்

கேரளத்தில் அத்வானி யாத்திரை நடத்தும் முன் கோழிக்கோடு வந்த தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், அவரது பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது கோழிக்கோட்டில் அத்வானியின் வாகனத்தை ஓட்ட இரு முஸ்லீம் போலீசார் நியமிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த கமாண்டோக்கள் அதை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இவருமே அந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. தேசிய பாதுகாப்புப் படையின் இந்தச் செயலுக்கு கேரளத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து கேரள மாநில முஸ்லீம் லீக் தலைவரும் வெளியுறவு இணையமைச்சருமான அகமது மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தாவை நேரில் சந்தித்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு தேசிய பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் தத்துக்கு உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், இது குறித்து தேசிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையி்ல், இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications