பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில் இலங்கைத் தமிழர் பிரச்னை, அணு ஒப்பந்தம், தீவிரவாதம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கிளப்பி மத்திய அரசை ஒரு பிடிபிடிக்க எதிர்கட்சிகள் தயாராகவுள்ளன.
அணு ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதை அடுத்து கடந்த ஜூலை 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தப்பியது.
அதற்கு பிறகு கூடும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. அடுத்த மாதம் 24ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை மாதத்திற்கு பிறகு, நாட்டில் வெடிகுண்டு தாக்குதல்கள், மதக் கலவரங்கள் என்று மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
எதிர்கட்சியான பாஜக அணுஒப்பந்தம், பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, ராமர் பால விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப உள்ளது. இதுகுறித்து அக்கட்சி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது
அணு ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் அளித்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டதா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றார்.
கூட்டத்தின்போது எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பின்னர், அவர்கள் கூறியதாவது
அணு சச்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் தவறான தகவல்களைத் தந்து மக்களை திசை திருப்புகின்றனர். அணு ஒப்பந்த விவகாரத்தில் உள்ள உண்மைகளை மக்களுக்குத் தெரிய வைப்போம். விலைவாசி உயர்வு, சிறுபான்மையினர் மீது தாக்குதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்புவோம் என்றனர்.
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை இராணுவம் உடனடியாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். எனவே, இலங்கைப் பிரச்சனையும் நாடாளுமன்றத்தில் சூட்டைக் கிளப்பும் என்று தெரிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், இந்த தொடரில் 71 சட்ட மசோதாக்கள், 2 நிதி மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 16 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications