தஞ்சை: ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்வதைக் கண்டித்தும் ஈழத் தமிழர் பாதுகாப்பு கோரியும் இலங்கை அதிபர் கொடும்பாவியை தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும். போர் நிறுத்தம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடைகள் மருந்து போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது மாணவர்கள் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். போலீஸார் விரைந்து வந்து மாணவர்களை கலைத்தனர்.












Click it and Unblock the Notifications