10000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது சென்செக்ஸ்!
மும்பை: இந்திய பங்குச் சந்தைக்கு இன்று மிக மோசமான நாள். இன்று சென்செக்ஸ் குறியீட்டு எண் 10000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்செக்ஸ் இந்த அளவு மோசமான நிலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இன்று வர்த்தக நேரத் துவக்கத்தில் 200 புள்ளிகள் ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் போகப் போக சரியத் துவங்கியது.
ஒரு கட்டத்தில் 791 புள்ளிகள் குறைந்துவிட, சென்செக்ஸ் 10,000 புள்ளிகள் என்ற கட்டத்தையும் தாண்டி சரிந்தது. கடந்த 18 மாதங்களில் சென்செக்ஸ் 10,000 புள்ளிகளுக்குக் கீழ் போயிருப்பது இதுவே முதல் முறை.
ஸ்டெரிலைட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிஎல்எப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் வரை சரிந்தன.
பிற்பகல் வர்த்தகம் முடிவடையும் நேரத்தில் சென்செக்ஸ் 668 புள்ளிகள் குறைந்து 9913.19 ஆகவும், நிப்டி 215 புள்ளிகள் குறைந்து 3053 ஆகவும் இருந்த்து.
பரவும் வதந்தி!:
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் அவற்றை முறியடிக்கும் விதமாக தொடர்ந்து பொருளாதாரம் குறித்து தவறான செய்திகள் பரவி வருவதால் பங்கு வர்த்தகம் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
தொடர்ந்து 3 நாட்களாக உலக பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் அளவு பல லட்சம் கோடிகள்.
இந் நிலையில் அமெரிக்க பங்குச் சந்தையான டெள ஜோன்சிலும் ஆரம்பமே சறுக்கியது. எடுத்த எடுப்பிலேயே 219 புள்ளிகள் சரிந்தன.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications