இலங்கைக்கு ராணுவ உதவி ஏன்?-மத்திய அரசு விளக்கம்
பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு.
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று பெங்களூருக்கு வந்திருந்த மத்திய ராணுவ ராஜாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு எம்.எம்.பல்லம் ராஜு கூறியதாவது:
இலங்கைக்கு உதவிகளும், தளவாடங்களும், ராடார்களும் இந்தியா வழங்கி உள்ளது உண்மைதான்.
இவற்றை வழங்குவதற்கான காரணம், தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாக திகழ்வதை உறுதிப்படுத்துவதற்காகவே.
இதுவும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.
இலங்கையில் மோதல் குறைவதற்கும், இலங்கை அரசும், தமிழர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கும் இந்தியா பாடுபட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் மனித உரிமைகள் பற்றி இந்தியாவும் உணர்ந்துள்ளது என்றார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications