பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு-இ.முன்னணி எதிர்ப்பு

இது தொடர்பாக அந்த அமைப்பின் அமைப்பாளர் இராம.கோபாலன் விடுத்துள்ள அறிக்கையில்,
பாதுகாப்பான விதத்தில் தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது என்பதற்காக அரசு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இதை இந்து முன்னணி முழுமனதுடன் ஆதரிக்கிறது.
அதே நேரத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தான் பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற நிபந்தனை நியாயமற்றது.
காலை 4 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் குளித்துவிட்டு, இறைவனை வழிபட்டு புத்தாடை உடுத்தி இனிப்புகள் சாப்பிட்டு பட்டாசுகள் வெடிப்பது காலம் காலமாக பின்பற்றப் பட்டு வரும் மரபு. இதை மாற்றக்கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
ஒரு குறிப்பிட்ட டெசிபல்களுக்கு அதிகமாக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று சொல்வது நியாயம்தான். ஆனால் அதை தயாரிக்கும் இடத்திலேயே சரி செய்ய வேண்டும். பட்டாசு வாங்குகிற மக்களுக்கு இந்த டெசிபல் கணக்கு எல்லாம் தெரியாது.
நமது நாடு கிரிக்கெட்டில் ஜெயித்தாலோ, கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றாலோ, தலைவர்களின் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள், மாநாடு, ஊர்வலம் போன்றவற்றில் எல்லாம் மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து வெளிப்படுத்துகிறார்கள்.
அப்போதெல்லாம் நேரம் வரையறை செய்வது கிடையாது, கண்டுகொள்வதும் கிடையாது.
தீபாவளி கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் குறைக்கின்ற எந்த ஒரு உத்தரவையும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications