மத்திய அமைச்சர்-எம்பிக்கள் பயணித்த விமானங்களில் திடீர் கோளாறு!
சென்னை: மத்திய அமைச்சர், எம்பிக்கள் பயணம் செய்த கிங் பிஷ்ஷர் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் நடுவில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விமானத்தை விட்டு இறங்கிய கையோடு தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர் பெரும்பாலான பயணிகள்.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் கிங் பிஷ்ஷர் (ஐபி 231) விமானம் நேற்று காலை 6.15க்கு புறப்பட்டது. அதில் மத்திய இணை அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் எம்பிக்கள் கார்வேந்தன், ஜே.எம்.ஆரூண் உட்பட 60 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதைக் கவனித்தார் விமானி.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தை உடனே சென்னையில் தரையிறக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த விமானம் காலை 7.15-க்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
மற்ற பயணிகள் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் சரி செய்யப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதாகப் புறப்பட்டது. அதற்குள் பெருமாபாலான பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினர்.
இதேபோல் நேற்று அதிகாலை 5 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஐ எக்ஸ் 622) விமானம், 7 ஊழியர்கள், 168 பயணிகளுடன் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
அந்த விமானமும் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த 175 பேரும் உயிர்த் தப்பினர்.
பின்னர் மாற்று விமானம் மூலம், பகல் 12 மணிக்கு பயணிகள் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications