வைரமுத்து மீது திமுக தொண்டர்கள் காட்டம்!
Subscribe to Oneindia Tamil
தேனி: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தேனியில், திமுக தொண்டர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
திமுக உள்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேனியில் திமுக உள் கட்சி தேர்தல் நடைபெற்று வருகி்றது.
இந்த தேர்தலில் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் மூக்கையாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே பதவியை பிடிக்க கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் கவிஞர் வைரமுத்து திமுக உள் கட்சி தேர்தலில் மூக்கை நுழைத்து குழப்பம் விளைவித்து வருவதாக தேனி திமுக மாவட்ட செயலாளர் மூக்கையாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் வைரமுத்துவிற்கு எதிராக தேனி மாவட்டம் முழுக்க பரவலாக போஸ்டர்களை திமுகவினர் ஒட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications