பங்கு வர்த்தக சரிவு: 28 புதிய நிறுவன பங்கு வெளியீடு நிறுத்தம்!
மும்பை: சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடி இந்திய பங்குச் சந்தையையும் 'ஒரு கை பார்த்து' வருகிறது.
மோசமான பொருளாதார சூழல் காரணமாக புதிய பங்குகளை வெளியிட, 'செபி'யின் அனுமதி பெற்றிருந்த 28 நிறுவனங்கள் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டன.
பங்குகளை வெளியிட 'செபி'யின் அனுமதி பெற்ற தேதியிலிருந்து 90 தினங்களுக்குள் நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டும்.
ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் (ரூ.6,000 கோடி), ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் (ரூ.4,000 கோடி), யூ.டி.ஐ. அசெட் மேனேஜ்மெண்ட் (ரூ.2,000 கோடி), அக்மி டெலிபவர் (ரூ.1,200 கோடி), மகிந்திரா ஹாலிடேஸ்&ரிசார்ட்ஸ் இந்தியா (ரூ.1,000 கோடி), எம்.சி.எக்ஸ் (ரூ.600 கோடி) ஆகிய முன்னணி நிறுவனங்கள் மொத்தம் ரூ.19,463.19 கோடி திரட்ட இம்மாதம் 17-ந் தேதிக்குள் பங்குகளை வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால் பங்கு வர்த்தகத்தின் மந்த நிலையால் இந்நிறுவனங்கள் பங்குகளை வெளியிட விரும்பவில்லை. இந்நிறுவனங்கள் கெடு தேதிக்குள் பங்குகளை வெளியிடாததால் அனுமதி காலாவதியாகி விட்டது!
இவற்றைத் தவிர, பங்கு வெளியிட மேலும் 14 நிறுவனங்கள் 'செபி'யின் அனுதியைப் பெற்றிருந்தன. இவற்றின் கெடு தேதி இன்னும் முடிவடையவில்லை. பங்குகளை இந்நிறுவனங்கள் வெளியிடுமா என்பதும் தெரியவில்லை.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications