தாஸ்முன்ஷிக்கு சிகிச்சை அளிக்க யுஎஸ் டாக்டர் வருகை
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்க நரம்பியல் நிபுணர் டெல்லி வந்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கடந்த வாரம் இதய நோய் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ள போதிலும், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து நரம்பியல் நிபுணர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் டாக்டர் டென் ஹென்லி, தாஸ்முன்ஷியின் குடும்ப மருத்துவரின் அழைப்பை ஏற்று அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி வந்துள்ளார்.
நேற்று டாக்டர் ஹென்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களை சந்தித்து தாஸ்முன்ஷியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இன்று தாஸ்முன்ஷிக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்து, அதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்க முடிவு செய்துள்ளார். இங்கேயே சிகிச்சையை தொடருவதா அல்லது அமெரிக்காவிற்கு அழைத்து செல்வதா என்பது பற்றி முடிவு செய்வார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தாஸ்முன்ஷியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவரது நரம்பு மண்டல செயல்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications