மணல் கடத்தலில் கே.சி.பழனிசாமி- ஜெ புகார்!
கரூர்: கரூர் திமுக எம்.பி. கே.சி. பழனிச்சாமி மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளிடுட்டுள்ள அறிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் திம்மாச்சிபுரம், கட்டளை, வாங்கல், நெரூர், மருதூர், வதியம் லாலாபேட்டை ஆகிய இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் அன்பில், நொச்சியம், திருவேங்கிமலை, அய்யம் பாளையம், முசிறி, வரதராஜபுரம், தொட்டியம் ஆகிய இடங்களிலும் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடுக்கப்படும் மணலில் இரண்டு யூனிட் மணலுக்கு பதில் நான்கு யூனிட் மணலும், நான்கு யூனிட் மணலுக்கு பதில் ஆறு யூனிட் மணல் கடத்துப்படுகிறது.
அரசு தொகையான ரூ.626த்தை செலுத்தி விட்டு மறைமுகமாக கோயம்புத்தூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மணல் கடத்தப்பட்டு, அங்கு இரண்டு யூனிட் மணல் ரூ 5,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
இதன் பின்னணியில் கரூர் திமுக எம்.பி.பழனிச்சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இதைக் கண்டித்து அதிமுக சார்பில் கரூர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை (22 ம் தேதி) குளித்தலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் அதிமுக அமைப்புச் செயலாளர் ம.சின்னசாமி தலைமையிலும், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கே.கே.பாலசுப்ரமணியன், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications