தொடர் மழை-நிரம்பும் தென் மாவட்ட அணைகள்
திண்டுக்கல்: தொடர்மழை காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அணைகளின் நீர் மட்ட அளவு அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாலாறு - பொருந்தலாறு அணை, பரப்பலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணை, குடகனாறு அணை, நங்காஞ்சியார் ஆகிய அனைத்து அணைகளிலும் நீர் மட்ட அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கன மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.20 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையிலிருந்து வினாடிக்கு 1,350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதே போன்று, தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வைகை அணையின் நீர் மட்ட அளவு 58.40 அடியாக அதிகரித்துள்ளது.
மஞ்சளாறு அணையில் நீரின் அளவு 55.40 அடியாக அதிகரித்துள்ளது. இந்த அணையிலிருந்து 284 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணை முழுமையாக நிரம்பியுள்ளதால் அணைக்கு வருகிற 546 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், பிளவக்கல்லில் உள்ள பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின் நீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பெரியாறு அணையின் நீர் அளவு 45 அடியாக அதிகரித்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 47.5 அடி ஆகும்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications