ராஜஸ்தான்: பட்டாசு விபத்தில் 18 பேர் பலி
பாரதிபூர்: நேற்று நள்ளிரவு பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 வீடுகள் இடிந்தன. இதில் 10 குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த கோர விபத்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது
ராஜஸ்தான் மாநிலம் பாரதிபூர் மாவட்டத்தில் டீக் என்ற இடத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி நெருங்கும் நிலையில் ஏராளமான பட்டாசுகளை தயாரித்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு வீட்டில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. இதில் அந்த வீடும், அருகில் இருந்த வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. அதில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் டீக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications