இலங்கை பிரச்சினைக்கு பேச்சு மூலமே தீர்வு சாத்தியம்: பிரணாப்
டெல்லி: இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
லோக்சபாவில் இன்றும் இலங்கை இனப் பிரச்சினை குறித்து விவாதம் சூடாக நடந்தது. விவாதத்திற்குப் பதிலளித்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், இலங்கையுடனான பாதுகாப்பு உறவு முக்கியமானது. அதேசமயம், ராணுவ நடவடிக்கை மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு சாத்தியமாகும். இதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.
ராணுவ நடவடிக்ைகயால் தீர்வு சாத்தியமல்ல. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை. இலங்கையில் நீடித்து வரும் போரால் அப்பாவி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவது இந்திய அரசுக்கு கவலை தருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் செயல்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications