பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார்
கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர்.
செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை காங்கிரஸார் எரிக்க முயன்றனர். போலீஸார் அதை தடுத்து நிறுத்தி எரிக்க கூடாது என்று அனுமதி மறுத்தனர்.
அதற்கு, கட்சி அலுவலகத்துக்குள்தான் கொளுத்துவதாக கூறிய காங்கிரஸார், போலீஸாரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். பின்னர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்தனர். அதை அலுவலகத்துக்கு வெளியில் கொண்டு வந்து போட்டனர்.
இதையறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை தலைவர் அறிவுடைநம்பி தலைமையில் அங்கு கூடிய அக்கட்சியினர், பிரபாகரன் கொடும்பாவியை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அறிவுடைநம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவு, சிறுவர் எழுச்சி துணை செயலர், தொண்டரணி துணைச் செயலர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications