லஞ்சம்-ஈரோடு பதிவாளர் அலுவலகத்தில் ரெய்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளி இனாமாக வசூல் செய்யப்பட்ட ரூ.70,000த்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் கீழ் 16 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த சார்பதிவாளர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் தீபாவளி இனாமாக ஒரு தொகையை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சில சார் பதிவாளர்களும் தீபாவளி இனாம் வசூல் செய்து பதிவாளரிடம் கொடுக்க தயாராக இருந்தனர். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பதிவாளர் அலுவலகத்தில் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்து ரூ 25,000 கைப்பற்றப்பட்டது. மேலும் இனாமாக கொடுக்க வைத்திருந்த தொகை உள்பட லஞ்சப் பணம் ரூ.70,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications