சரத்குமார் 150 நாள் தமிழக சுற்றுப் பயணம்
திருச்சி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 150 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் கூறுகையில்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 150 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிவார்.
மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதை அனுப்பி தீர்வு காண்பார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயாரிப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் பேசி வருகிறார்.
திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
தேவைபடுமானால் இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.
வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர். எனினும் இதுகுறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை சரத்குமார் எடுப்பார் என்று கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications