தேவர்-மருதுபாண்டியர் குருபூஜை: ஆயுதம், பேனர்களுக்கு தடை
சிவகங்கை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 27ம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மற்றும் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.
அதேபோல அக்டோபர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், தேவர் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
எஸ்.பி. கண்ணன், தேவகோட்டை சப்-கலெக்டர் தாரேஸ் அகமது, ஆர்.டி.ஓ., ஷாஜகான், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் முடிவில் போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று அதே வழியில் திரும்ப வேண்டும்.
ராமநாதபுரத்தில் வரும் வாகனங்கள் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக வந்து, திரும்ப வேண்டும்.
ஆர்.எஸ்., மங்கலத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவாடானை, திருவேகம்புத்தூர் வழியாக வந்து, செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை, திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் திருவாடானை, திருவேகம்புத்தூர் வழியாக சென்று, திரும்ப வேண்டும்.
அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, காரைக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் கல்லல் வழியாக சென்று, அதே வழியில் திரும்ப வேண்டும்.
சாலைக்கிராமத்திலிருந்து வரும் வாகனங்கள் சூராணம், சருகணி வழியாக வந்து, திரும்பி செல்ல வேண்டும்.
காஞ்சிரங்குளம் (திருப்புவனம்) பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் விரகனூர், சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை வழியாக வந்து, செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு செல்லும் வாகனங்கள் திருப்புவனம், மானாமதுரை வழியாக சென்று, கமுதி, கண்ணார்பட்டி சந்திப்பு, கீழராமநதி, காரியாபட்டி, ரிங்ரோடு வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் திருப்புத்தூர், சிவகங்கை, மானாமதுரை வழியாக பசும்பொன் சென்று, திரும்ப வேண்டும்.
காளையார்கோவில் நினைவிடத்திற்கு வரும் பல்வேறு அமைப்புகளின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 22 அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இடம் பெற்றன. அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி நேரம் ஒதுக்கீடு பெற வேண்டும்.
ஆயுதம்-பேனர்-பட்டாசுகளுக்குத் தடை
வாகனங்களில் ஆயுதங்கள், வெடி பொருட்கள், பட்டாசுகள் கொண்டு செல்ல கூடாது. ஜாதி தொடர்பான பேனர்கள் மற்றும் படங்கள் வாகனங்களில் ஒட்டக்கூடாது. பிற ஜாதியினரையோ அல்லது கட்சியினரையோ புண்படுத்தும் கோஷங்கள் எழுப்ப கூடாது.
வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்தக் கூடாது. வாகனங்களில் மேற்கூரையில் அமர்ந்து செல்லகூடாது. குடிபோதையில் வாகனங்கள் ஓட்ட கூடாது. லாரி, மினி லாரி போன்ற திறந்த வெளி வாகனங்களில் செல்ல கூடாது.
சமாதிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றுள்ள அமைப்புகளும், கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்தி முடித்துவிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications