ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலில் இந்தியா
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக 54 நாடுகள் உள்ளன. இந்தக் கவுன்சிலுக்கு இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 18 நாடுகள் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இந்தியா அங்கம் வகிக்கும். மொத்தமுள்ள 184 வாக்குகளில் இந்தியாவுக்கு 179 வாக்குகள் கிடைத்தன.
ஒவ்வொரு ஆண்டும் 18 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிதாக உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம் என்பு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications