வைகோவைத் தொடர்ந்து சீமான், அமீரும் கைது
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை இன்று போலீஸார் அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்தனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைப்பட கலைஞர்கள் சார்பில் கடந்த 19 -ந் தேதி ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான், சேரன், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அதன் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.
மேலும் இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இன்று மாலைக்குள் இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்பு 3 பேரின் உருவப் பொம்மைகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் திரண்டு எரிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் சீமான், அமீர், சேரன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து இன்று மாலை இருவரது வீடுகளுக்கும் சென்ற போலீஸ் படை அவர்களைக் கைது செய்தது. சீமானும், அமீரும் போலீஸார் தங்களைக் கைது செய்வதற்கு வசதியாக வீடுகளில் காத்திருந்தனர்.
இருவர் மீதும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே குற்றச்சாட்டுக்களின் பேரில்தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளது போலீஸ்.
கைதுக்கு முன்னதாக போலீஸ் நடவடிக்கை குறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.
பாரதிராஜா கைதாவாரா?
பாரதிராஜா மற்றும் சேரனையும் விரைவில் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications