நில மோசடி-கார்மெண்ட்ஸ் அதிபர் கைது!
சென்னை: வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை ரூ.22 கோடிக்கு விற்பனை செய்து, முன் பணமாக ரூ.6.10 கோடி வாங்கி ஏமாற்றியதாக கார்மெண்ட்ஸ் அதிபர் ஹாஜி மூசா கைது செய்யப்பட்டார்.
மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலாயுதம். அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் இவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
தேனாம்பேட்டை செனடாப் ரோட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மூசா அகமது, என்பவருக்கு சொந்தமான கிண்டியில் உள்ள ரூ.22 கோடி மதிப்புள்ள 18 கிரவுண்ட் நிலத்தை வாங்க ஒப்பந்தம் செய்தார்.
அதற்காக ரூ.6.10 கோடியை முன்பணமாக கொடுத்து விற்பனை ஒப்பந்தம் போட்டுள்ளனர். அந்த நிலத்தின் பத்திரத்தை கனரா வங்கியில் ரூ.22 கோடிக்கு அடமானம் வைத்திருப்பது பின்னர் தெரிய வந்தது.
அதனால் அடமானம் வைத்த நிலத்தை மறைத்து தனக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் செய்ததோடு, ரூ.6.10 கோடியை வாங்கிக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறார் என மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் வேலாயுதம் புகார் செய்தார்.
இந்தப புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று மூசாவை கைது செய்தனர்.
இவர், ஹாஜி மூசா அண்ட் கோ என்ற கார்மென்ட் எக்ஸ்போர்ட் தொழிலை சென்னை மற்றும் மதுரையில் நடத்துகிறார்.
கைது செய்யப்பட்ட மூசா, சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications