இலங்கை: அரசு நடவடிக்கையில் வீரமணி மகிழ்ச்சி
சென்னை: முதலமைச்சர் கருணாநிதி எடுத்த முயற்சிகள் காரணமாக இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் பெரிய திருப்பம் ஏற்பட்டிருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நமது முதல்வர் எடுத்த அடுக்கடுக்கான முயற்சிகள், தமிழ் மக்களின் எழுச்சி வீண் போகவில்லை; நல்ல விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றன!
சிங்கள அதிபராகவே நடந்து கொள்ளும் ராஜபக்சே நமது பிரதமரிடம் பேசியது இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் இந்தியத் தூதவரிடம் பேசி, இலங்கை அரசுக்கு இந்திய அரசின் கவலையையும், உணர்வுகளையும் தெரிவித்தது; அங்கிருந்து அவரது ஆலோசகர்களை ஒரு குழுவாக அனுப்பி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச வைத்தது;
அங்குள்ள தமிழர்களைக் கொல்லாமல், காப்பாற்றிட அவர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்களை உடனடியாக அனுப்பிட ஏற்பாடுகள் செய்திருப்பது உள்பட அரசியல் தீர்வு காண உடனடியான ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் உத்தரவாத உறுதி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாள்களில் ஏற்பட்ட ஆக்க ரீதியான பலன்கள் பலவற்றைத் தந்துள்ளது.
நமக்கு 100க்கு 100 மன நிறைவு இதன் மூலம் உடனடியாக ஏற்பட்டு விட முடியாது என்றபோதிலும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போரில் இது ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications