31ம் தேதி ஷார்ஜாவில் இலவச மருத்துவ முகாம்
ஷார்ஜா: ஷார்ஜாவில் வருகிற 31ம் தேதி இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீத் மற்றும் அல் அஹலியா மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் பல் மற்றும் பொது மருத்துவத்திற்கான சிகிச்சைகளும் மேலும் சர்கரை வியாதி இரத்த அழுத்த நோய்களுக்கான பரிசோதனைகளும் அறுவை சிகிற்சை சம்பந்தமான ஆலேசனைகளும் வழங்கப்படவிருக்கின்றது.
மருத்துவச் சேவை காலை 8.00 மணி முதல் மதியம் 11.30 மணிவரை மட்டுமே நடைபெறவிருப்பதால் தேவையுடையவர்கள் தங்கள் முகவரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்னர் ஏப்ரல் மாதத்தில் நடந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாம் மூலம் பயன் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்.
0503832302, 050 4834530, 050 6965774
இத்தகவலை ஷார்ஜா மண்டல, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஷிஹாபுத்தீன் கேயா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications