சென்செக்ஸுக்கு ஆக்ஸிஜன் தந்த தீபாவளி முகூர்த்தம்
மும்பை: நேற்று தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தில் தம் கட்டி மேலே வந்த சென்செக்ஸ் மேலும் கீழுமாகப் போய் பங்குச் சந்தை வர்த்தக நேரத்தின் இறுதியில் 9,034 புள்ளிகளில் போய் நின்றது.
நேற்று முன் தினம் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 8,000 புள்ளிகளுக்குக் கீழே போய் பீதியைப் பரப்பியது. மாலையில் 8,509 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஆனாலும் 191 புள்ளிகளை இழந்துவிட்டது.
இந் நிலையில் தீபாவளியையொட்டி நேற்று மாலை பங்குச் சந்தையில் முகூர்த்த வர்த்தகம் நடந்தது. ஒரு மணி நேரமே நடந்த வர்த்தகம் பீதியுடன் தான் ஆரம்பித்தது.
ஆனால், ஒருவழியாக 498 புள்ளிகளை கூடுதலாகப் பெற்று 9,034 புள்ளிகளுடன் நல்லபடியாக முடிந்தது முகூர்த்த வர்த்தகம். அதே போல தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டியும் 160 கூடுதல் புள்ளிகளுடன் 2,684ல் போய் நின்றது.
இன்று பங்குச் சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மாலையில் வர்த்தகம் முடிந்தபோது சென்செக்ஸ் 9,029 புள்ளிகளுடனும், நிப்டி 2,701 என்ற நிலையிலும் இருந்தது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications