வழக்கறிஞர் அலுவலக வாளகத்தில் சிறுமி கற்பழிப்பு-குமஸ்தா தலைமறைவு
செங்கோட்டை: செங்கோட்டை வழக்கறிஞர் அலுவலக வாளகத்தில் சிறுமி கற்பழிக்கப்பட்டார்.
செங்கோட்டை வண்டிமலச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமலையாண்டி (60). இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் குமஸ்தாவாக பணியாற்றி வருகிறார்.
நேற்று இவரது மனைவி ஆவுடையம்மாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் முருகன்-ஜீவா தம்பதியினரின் மகள் குமுதா (8) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பியுள்ளார்.
சிறுமி குமுதா நீதிமன்றம் அருகில் இருக்கும் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தின் வாளகத்தில் இருக்கும் திருமலையாண்டியிடம் போய் சாப்பாட்டினை கொடுத்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் திருமலையாண்டி சிறுமி குமுதாவை பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சாப்பாடு கொண்டு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் திரும்பாததால் சிறுமி குமுதாவை தேடி தாய் ஜீவாவும், அவளது பாட்டி சுப்பம்மாளும் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது திருமலையாண்டி சிறுமியை அலங்கோலப்படுத்தியதை கண்டு சப்தம் போடவே அருகில் காவலர் குடியிருப்பிலிருந்து சிலர் ஓடி வரவே திருமலையாண்டி தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து ஏட்டு மெளது கனி வழக்குப் பதிவு செய்தார்.
சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிய திருமலையாண்டியை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தேடி வருகிறார்.
நீதிமன்றம், பத்திரபதிவு, கருவூலம், ஊராட்சி ஓன்றியம், தலுகா அலுவலகம், வேளாண்மை துறை, தீயணைப்பு நிலையம், காவலர் குடியிருப்பு, நீதிபதி, தாசில்தார் குடியிருப்பு, பள்ளிகூட மாணவியர் விடுதி, தொலைபேசிதுறை அலுவலகம் ஆகியவை அடங்கிய வாளகத்தில் ஒரு குமஸ்தாவால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதி ஜெயக்குமாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications
