இன்றும் ஆஜராகாத நிதி அமைச்சர் மரிய வில்சன்.. 10 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக நீதிபதி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 10 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு பட்ஜெட் தயாரிப்பு பணியில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மரிய வில்சன் தனது சகோதரர் மரிய க்ளோட் மற்றும் அவரது மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் பதிவான வழக்கின் அடிப்படையில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Marie wilson court

மரிய வில்சன், அவரது உடன் பிறந்த சகோதரர் மரிய கிளோட் மற்றும் அவர் மனைவி மீது கடந்த 2022 ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் உள்ள அவர்களை வீடு புகுந்து கட்டையால் தாக்கி கொலை முயற்சி நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உருட்டுக் கட்டைகளுடன் வீடு புகுந்த மரிய வில்சன் கும்பல், அவரது சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது. இதில் காயமடைந்த சகோதரரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மரிய வில்சன் மீது அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மரிய வில்சன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக நீதிமன்ற விசாரணைக்கு அமைச்சர் மரிய வில்சன் சரியாக ஆஜராகாத நிலையில் இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிக்கையை நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள, ஜூலை 4 ஆம் தேதி (இன்று) புதுச்சேரி ஜெ.எம் ஒன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இன்றும் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். அவர் நீதிபதி சேரலாதனிடம், தமிழகத்தில் பட்ஜெட் பணிகள் நடந்து வருவதால், அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார்.

அதற்கு நீதிபதி சேரலாதன், இன்று சனிக்கிழமை, விடுமுறை நாள் என்பதால்தான் ஆஜராகும்படி கூறினேன். இப்போதும் ஆஜராகவிட்டால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினார். மேலும் வரும் 6 ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என கூறினார். அதற்கு வழக்கறிஞர் சிவக்குமார், அன்றைய தினமும் ஆஜராக முடியாது எனக் கூறினார்.

இதையடுத்து நீதிபதி சேரலாதன், வரும் 10 ஆம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் மரியவில்சன் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரிய வில்சன் தற்போது தமிழக நிதி அமைச்சராக உள்ளார். இந்நிலையில், அடிதடி, கொலை முயற்சி வழக்கில் அவர் ஆஜராக நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+