பணவீக்கம் 10.68 சதவீதமாக குறைவு!
மும்பை: நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இறங்குமுகத்தில் உள்ளது. இந்த வார நிலவரப்படி பணவீக்கம் 10.68 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மொத்த விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம், இதற்கு முந்தைய வாரத்தில் 11.07 சதவீதமாக இருந்தது.
எரிபொருள் விலை குறைவு, உற்பத்தி பொருட்களில் விலை குறைவு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைவு போன்ற காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக 11 சதவீதத்திற்கும் மேல் இருந்த பணவீக்கம் இப்போது 0.39 சதவீதம் குறைந்து, 11 சதவீதத்திற்கும் கீழே வந்திருக்கிறது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்தியாவின் பணவீக்கம் 3.11 சதவீதம்தான்!.
இந்த வருடம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 8.75 சதவீதமாக இருந்த பணவீக்கம், பெட்ரோலிய பொருட்களில் விலை உயர்வால் இரட்டை இலக்கத்திற்கு சென்றது.
இப்போது ரிசர்வ் வங்கியின் சி.ஆர்.ஆர்/ ரிபோ ரேட் குறைப்பால் விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகியிருக்கிறது. பருப்பு, பழங்கள், கோதுமை விலை குறைந்திருக்கிறது.
முலதனப் பொருட்களான இரும்பு உள்ளிட்டவற்றின் விலை 0.5 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் காய்கறிகள் விலை 2.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications