புலிகளின் முக்கிய கடற்படை தளம் வீழ்ந்தது

நச்சுகுடாவில் உள்ள இந்த புலிகளின் முகாம் அதன் கடற் பிரிவின் முக்கியத் தளமாகும். இந்தத் தளத்தை மூன்று திசைகளில் இருந்து தாக்கி கைப்பற்றிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயபுரம் என்ற பகுதியும் தங்கள் வசம் வந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து புலிகள் தரப்பில் மறுப்பு ஏதும் வெளியிடப்படவில்லை,
அதே போல பூந்தேரின் பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலையையும் ராணுவம் கைப்பற்றி அதை துண்டித்துள்ளது.
60 வீரர்கள் பலி-பின்வாங்கிய ராணுவம்:
இதற்கிடையே கிளிநொச்சியை ஒட்டிய அக்கராயன் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் சண்டையில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இலங்கை ராணுவம் ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
விடுதலைப் புலிகள் பதிலடி தாக்குதல் நடத்தவே இரு தரப்பினருக்கும் இடையே 12 மணி நேரத்திற்கும் மேலாக கடும் சண்டை நடந்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கிய சண்டை மாலை 6 மணி வரை நீடித்ததாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலில் இலங்கை ராணுவ வீரர்கள் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும், புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அக்கராயன் பகுதியை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்டு ராணுவம் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
போரில் இறந்த வீரர்களின் உடல்களை மீட்டு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்போம் என்று விடுதலைப் புலிகள் அறிவி்த்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இலங்கை ராணுவத்திடம் இருந்து பெருமளவில் ஆயுதங்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications