இலங்கை பிரச்சனையில் கருணாநிதி காற்றுபோன பலூன்-விஜய்காந்த்
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி காற்றுப் போன பலூனாக ஆக்கிவிட்டார். தமிழகத்தில் மின் நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இலங்கைப் பிரச்னை கருணாநிதிக்குப் பயன்பட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அரசு தமிழ் பகுதிகள் மீது விமானப் படைகள் மூலம் குண்டுமாறிப் பொழிகிறது. இதன் விளைவாக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், மாதா கோவில்கள், இந்து கோவில்கள் என்று பொது நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளும் பலத்த உயிர்ச் சேதத்திற்கும், பொருட் சேதத்திற்கும் ஆளாகின்றன.
இதனாலேயே இலங்கை அரசு போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினோம்.
ஆனால், இலங்கை அரசோ விடுதலைப்புலிகள் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும், ஒரு அப்பட்டமான பொய்யை கூறி வருகின்றது. இது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் காரியமாகும்.
இரண்டு லட்சம் தமிழர்கள் போர் முனையில் சிக்கித் தவிக்கின்றனர் என இலங்கை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய அரசு தங்களை போர் நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் பேசியபோதும் போர் நிறுத்தத்தைக் கோரவில்லை. இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் எம்பிக்கள் ராஜினாமா செய்வர் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவித்தனர். இரண்டு வாரங்களும் ஓடிவிட்டன. போர் நிறுத்தமும் செய்யப்படவில்லை. எம்பிக்களும் பதவி விலகவில்லை.
இலங்கைத் தமிழர்கள் மீது பொழியும் குண்டுகள் மட்டும் இன்னும் நின்றபாடில்லை. இலங்கை அரசின் சார்பில் வந்த சிறப்புத் தூதர், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார். பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார். இதில் கருணாநிதிக்கும் திருப்தி, பிரணாப் முகர்ஜிக்கும் திருப்தி, இலங்கை அரசுக்கும் திருப்தி.
ஆனால், வீட்டை இழந்து வாழ்விழந்து உயிருக்குப் போராடும் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு திருப்தியா?.
இலங்கைத் தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி காற்றுப் போன பலூனாக ஆக்கிவிட்டார். தமிழகத்தில் மின் நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இலங்கைப் பிரச்னை கருணாநிதிக்குப் பயன்பட்டது.
கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடந்து கொண்ட விதத்தை நாம் பாராட்டுவதைவிட, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே வெகுவாக பாராட்டியுள்ளார். கருணாநிதி முதிர்ந்த அரசியல்வாதி என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண பாடுபடுகிறார் என்றும், மத்திய அரசின் அனுமதியோடு தங்கள் நாட்டிற்கு அவர் விஜயம் செய்ய வேண்டும் என்றும், இலங்கை அதிபர் வேண்டுகோள் விட்டதிலிருந்தே இலங்கை தமிழர் பிரச்சினையில் எத்தகைய மகத்தான பணியை கருணாநிதி ஆற்றியிருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்.
எல்லா மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கொடுப்பது தான் ஜனநாயகம். புத்த மத குருமார்களின் மேற்பார்வையில் சிங்கள வெறியர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு ஜனநாயக முலாம் பூசுவதை எப்படி ஏற்க முடியும்?.
இலங்கை அரசோ பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் இலங்கை தமிழினத்தை அழிக்கும். இந்திய அரசோ, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யச் சொல்லாது. தமிழக அரசோ இலங்கைத் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும்.
இலங்கை அரசின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டியதே தமிழ் மக்களின் கடமை. இலங்கைத் தமிழர்களுக்கு தேமுதிக தன்னால் இயன்றதை மாவட்டந்தோறும் திரட்டி அந்தந்த கலெக்டர்களிடம் ஒப்படைக்கும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications