எந்த உடன்பாட்டுக்கும் வராத யாஹூ- கூகுள் புகார்
சான்பிரான்சிஸ்கோ: கூட்டு விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை ஒரு உடன்பாட்டுக்கும் வர முடியாததால், கூகுள் மற்றும் யாஹூ நிறுவனங்கள் அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் இணையதள சேவை மற்றும் தேடு கருவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் யாஹூ மற்றும் கூகுள். 80 சதவிகித சேவையை இந்த நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன.
அமெரிக்காவின் நீதித்துறையுடன் இணைந்து விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது குறித்து இரு நிறுவனங்களும் சில மாதங்களாக பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த திட்டத்திலிருந்தே பின்வாங்கிக் கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் யாஹூவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க முயன்று கைவிட்ட நிலையில், கூகுளுடன் கைகோர்த்தது யாஹூ. இதன் சர்ச் ரிசல்ட்டுடன் கூகுள் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் தற்போதைய வருவாயை (250 பில்லியன் டாலர்கள்!) இரு மடங்கு உயர்த்த முடியும் எனக் கணக்கிட்டது யாஹூ.
இதில் கணிசமான பகுதி கூகுளுக்கு தரப்படும். இரு தரப்புக்கும் பரஸ்பர பலன்களைத் தரக் கூடிய ஒப்பந்தம் இது என்பதால் அதை முடிவு செய்வதில் இரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டின. ஆனால் சில நடைமுறை சிக்கல்கள்கள் காரணமாக இந்த ஒப்பந்தம் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் கூகுள் நிறுவனம் தனது விளம்பரங்களை யாஹூவின் ஆன்லைன் பக்கத்தில் வெளியிட நிர்ணயித்துள்ள கட்டணம் மிக அதிகம் என விளம்பரதாரர்கள் கடும் ஆட்சேபணை தெரிவித்து வந்தனர். ஒப்பந்தம் தாமதமாவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
எப்படியிருந்தாலும் அடுத்த வார மத்தியில் இதுகுறித்த இறுதி முடிவை யாஹூவும் கூகுளும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வியாழக்கிழமை இதுகுறித்து அமெரிக்காவின் நீதித்துறையுடன் இணைந்து இரு நிறுவனங்களும் மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை இனேனும் சில தினஙஅள் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒப்பந்தம் குறித்து இரண்டில் ஒரு முடிவை வரும் வாரத்துக்குள் தெரிவித்துவிடுவோம் என யாஹூ செய்தித் தொடர்பாளர் ஷ்மாலர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பும் இன்னும் நட்பு ரீதியில் பேச்சுக்களைத் தொடர்வதாக கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஆடம் கொவாசெவிக் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications