அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக டேவிதார்
சென்னை: தமிழகத்தில் 8 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் டேவிதார், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராகவும் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழிற்சாலைகள் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குனர் உமாசங்கர், அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனராக மாற்றப்படுகிறார்.
வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றிருந்த எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குனர் எஸ்.கருத்தையா பாண்டியன், உள்துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் குமார் ஜெயந்த், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழிற்சாலைகள் முதலீட்டுக் கழக முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவராக இருந்த ஷீலாராணி சுங்கத், அந்தக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்படுகிறார்.
ஆளுநரின் செயலாளராக பணியாற்றி வரும் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்ட சப்-கலெக்டர் எஸ்.நாகராஜன், சிவகங்கை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications