ரஜினிக்கு டாக்டர் பட்டம்: கடைசி நேரத்தில் கைவிட்ட அழகப்பா பல்கலை!!
காரைக்குடி: புதிய நடிகர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், ரஜினிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் திட்டத்தை கைவிட்டது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் வரும் 24ம் தேதி, 21-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குமாறு ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து மகாராஷ்டிர ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஆதிமூலம், பல்கலைக்கழகப் பதிவாளருக்கு முறைப்படி கோரிக்கை மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து பதிவாளர் இ. இளமதியன் அனுப்பிய கடிதத்தின் பேரில், ரஜினியின் விவரக் குறிப்புகளை பல்கலைக் கழக சிண்டிகேட்டுக்கு அனுப்பினார் ஆதிமூலம்.
இது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் கூட்டம் துவங்கும் முன்பே ரஜினிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விஷயத்தில் திடீர் சர்ச்சை எழுந்தது. புதிய நடிகர் ஒருவர் தரப்பிலிருந்து இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என அவர் சிண்டிகேட் உறுப்பினர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டது பல்கலைக் கழகம். இதைத் தொடர்ந்து பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "21வது பட்டமளிப்பு விழாவில் யாருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதில்லை" என, அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசுகையில், நடிகர் ரஜினிக்கு கவுரவ பட்டம் வழங்கக் கோரி வந்த மனுவுக்கு மதிப்பளித்து பயோடேட்டா கேட்டோம். சிண்டிகேட் ஒப்புதலுக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே இது சர்ச்சைக்குரிய விஷயமாக்கப்பட்டுவிட்டது. எனவே அத்திட்டத்தையே நிராகரித்து விட்டோம். இது தொடர்பாக வேறு எந்த விஷயம் குறித்தும் பேச வேண்டாமே..., என்கிறார் பதிவாளர் இளமதியன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications