தேமுதிக-காங். கூட்டணி பேச்சு-சரத் தகவல்
திருச்சி: அதிமுக, திமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்னையைத் தீர்க்க, நார்வே தூதுக் குழு சென்றது போல், நாம் ஏன் தூதுக் குழு அனுப்பக் கூடாது எனக் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மீண்டும் நார்வே தூதுக்குழு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அதில் தமிழக தலைவர் யாராவது இடம்பெற வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்னையை அரசியலாக்கும் எண்ணத்தை கைவிட்டு, மனித நேயத்தோடு அணுக வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்னையை பற்றி நன்கு அறிந்தவர் வைகோ. அவர் அப்பிரச்னை குறித்து பேசினார். திரைப்பட டைரக்டர்களும் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதனால், அவர்களை மன்னிக்கலாம்.
நவம்பர் முதல் தேதி நடிகர் சங்கம் சார்பில், சென்னையில் உண்ணாவிரதம் நடக்கிறது. அதன்பின், நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும்.
எங்கள் கட்சி அதிமுக, திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. தேமுதிக காங்கிரசுடன் கூட்டணி பேச்சு நடத்துவதாக கூறப்படுகிறது. எனவே அக்கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்.
எங்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டால், 10 முதல் 15 சதவீத மக்கள் ஓட்டளித்தால் கூட போதும்.
விரைவில் மதுரை அல்லது ஒரு தென் மாவட்டத்தில் கட்சியின் மாநாடு நடத்தப்படும். அதிலேயே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பும் இருக்கும்.
டிசம்பர் 20ம் தேதிக்குப் பின் நூறு நாட்கள் கிராமப் புறங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications