ஒரிஸ்ஸா பெண்ணைக் கொன்ற இலங்கை அகதி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஒரிசாவைச் சேர்ந்த இளம் பெண்ணை, இலங்கை அகதி ஒருவர் படுகொலை செய்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அந்த பகுதியிலேயே குடிசை போட்டு தங்கி வருகின்றனர். ஒரிசாவை சேர்ந்த கண்ணைமண்டல் என்பவரும் மனைவி கூர்தேசியுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
கண்ணைமண்டல் தனது குடிசையில் பெட்டிகடை வைத்திருக்கிறார். அதை அவரது மனைவி கூர்தேசி கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று வெளியூர் சென்றிருந்த கண்ணைமண்டல் வீடு திரும்பிய போது அவரது மனைவி கூர்தேசி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து கண்ணைமண்டல் புதியம்புதூர் போலீசில் புகார் செய்தார்.
கொலையாளிகளை பிடிக்க தூத்துக்குடி குற்றபிரிவு போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்பு என்ற இலங்கை அகதிக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications