உத்தப்புரம் தீண்டாமை: நவ. 5ம் தேதி உண்ணாவிரதம்
மதுரை: உத்தப்புரத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மதுரையில் நவம்பர் 5 -ம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தப்புரத்தில் அரசு தலையிட்டு திறக்கப்பட்ட பொதுப் பாதையை பயன்படுத்த விடாமல் ஆதிக்க சக்திகள் சிலர் தொடர்ந்து வன்முறையை ஏவிவிட்டு வருகின்றனர்.
உத்தப்புரம் தலித் மக்கள் பொதுப்பாதையை பயன்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட உத்தப்புரம் தலித் மக்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
அவர்கள் மீது போலீசாரால் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும்.
தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நவம்பர் 5 -ம் தேதி மதுரை, மேல - வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications