கார் மோதி பலி-உடலை வீசிவிட்டு தப்பியோர் கைது
சென்னை: சென்னையில் ரோட்டில் நடந்து சென்றவர் மீது கார் மோதியதி்ல் அவர் பலியானார். இதையடுத்து அவரது உடலை வேறு இடத்தில் வீசுவிட்டுத் தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு பின்புறம் ரோடு ஓரத்தில் கடந்த 29ம் தேதி ஒரு ஆணின் பிணம் கிடந்தது.
அவரது சட்டை பையில் இருந்த டைரியில் இருந்த டெலிபோன் எண்ணை வைத்து அவரது பெயர் தயாளன் ( 48), மைலாப்பூர் காரனேஸ்வரர் பக்கோடா தெருவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். பிணத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது உடம்பில் கார் டயர் ஏறிய தடம் இருப்பதாகவும், கார் ஏறியதில் தான் இறந்தார் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், தயாளன் 29ம் தேதி அன்று இரவு மைலாப்பூர் வி.எம்.தெரு ஆர்.கே.சாலை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதாகவும், உயிருக்குப் போராடியபடி கிடந்த தயாளனை காரில் வந்தவர்கள் ஏற்றி சென்றதாகவும் சில ஆட்டோ டிரைவர்கள் தெரிவி்த்தனர்.
மேலும் காரின் நம்பரையும் அந்த ஆட்டோ டிரைவர்கள் தந்தனர்.
இந்த விவரத்தை வைத்து காரின் உரிமையாளரான சதக் அப்துல்லாவை (32) போலீசார் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது தெரியவந்த விவரம்:
அப்துல்லா, அவரது நண்பர்களான அரசு ஊழியர் செல்வமணி (33), மதுக்கடையில் வேலை பார்க்கும் முரளி (32) மூவரும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, காரில் வந்தபோது தயாளன் மீது கார் மோதியுள்ளது.
இதையசுத்து காயமடைந்த தயாளனை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக காரில் ஏற்றிச் சென்றனர். ஆனால், சிறிது தூரத்திலேயே தயாளன் இறந்துவிட்டார்.
இதையடுத்து கொலை கேஸில் மாட்டுவோம் என பயந்து தயாளனின் பிணத்தை வைத்துக் கொண்டு காரில் பல இடங்களில் சுற்றியுள்ளனர்.
கடைசியாக பச்சையப்பா கல்லூரிக்கு பின்புறம் ஹாரிங்டன் ரோட்டில் இருட்டான பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கவே உடலை அங்கு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அவர்கள் தந்த வாக்குமூலத்தில் இந்த தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications