கருணாநிதிக்கு ஸ்ரீ நாராயணி பீடம் கோரிக்கை!
வேலூர்: எல்லா மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக தமிழக அரசு பாடத் திட்டத்தில் ஆன்மீகத்தை கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீ நாராயணி பீடத்தின் நிறுவனர் சக்தி அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர், திருமலைக்கோடி அருகில் உள்ளது ஸ்ரீ நாராயணி பீடம். இந்த பீடத்தின் ஆரோக்யா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 320 சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி இந்த பீடத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு 200 சிறுவர்களுக்கு இருதய சிகிச்சைக்கான நிதி உதவி வழங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்டமாக மேலும் 150 பேருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கும் விழா நாராயணி பீடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஸ்ரீ நாராயணி பீடத்தின் நிறுவனர் சக்தி அம்மா குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த நாள் அற்புதமான நாள். காரணம் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 150 குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.
நாராயணி பீடத்தின் சார்பில் இது போன்ற நற்பணிகளை இயன்ற வரையில் செய்வதற்கு பக்தர்களே முழுக் காரணம்.
எல்லா மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக தமிழக அரசு பாட திட்டத்தில் ஆன்மீகத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்குலி கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications
