அமெரிக்க அதிபர் தேர்தல்-ஒபாமா முன்னிலை

ஒரு மாதம் முன்பு 18 சதவீதம் வரை அதிக வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெயினை விட முன்னிலையில் இருந்தார் ஒபாமா. தேர்தல் நெருங்க நெருங்க இந்த வித்தியாசம் குறைந்து கொண்டே வருகிறது.
இந் நிலையில் நாளை (4ம் தேதி) தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஒபாமா வெறும் 6 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் முன்னிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
இருந்தாலும் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளரான ஒபாமா வென்றுவிடுவார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
நாட்டின் 44வது அதிபரைத் தேர்ந்தெடுக்க 50 மாகாணங்களிலும் முறைப்படியான தேர்தல் நடக்கிறது. (இருப்பினும் சில மாகாணங்களில் சில பகுதிகளில் வாக்குப் பதிவு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது.)
அமெரிக்காவின் மாறுபட்ட டைம் சோனுக்கு ஏற்ப 50 மாகாணங்களிலும் வேறுபட்ட நேரங்களில் வாக்குப் பதிவு துவங்கும்.












Click it and Unblock the Notifications