தாக்குதல்-நீதி விசாரணை கோரும் கிருஷ்ணசாமி
சென்னை: தன் மீது நடந்த தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை மாவட்டம் உத்தமப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், இன்னொரு பிரிவினர் இடையே சுவர் எழுப்புவது தொடர்பாக 6 மாதமாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு சமூகத்தினர் இடையே சமரசம் ஏற்படுத்த அங்கு சென்றேன்.
மதுரை திரும்பும்போது எனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனக்கு பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மட்டுமே வந்திருந்தார்.
என்னை தாக்க வந்த கும்பலை நீண்ட நேரமாகியும் போலீசாரால் அப்புறப்படுத்த முடியவில்லை. தடியடி நடத்தி கூட அவர்களை விரட்ட முடியவில்லை.
ஆனால் எனது தொண்டர்கள் தான் கல்வீச்சில் இருந்து என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
நான் உத்தமபுரத்துக்கு செல்வது குறித்து முதல்வசரிடம் கடிதம் கொடுத்திருந்தேன். ஆனாலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை. 2 வருடமாக எனது பாதுகாப்பை குறைத்து விட்டார்கள். எனக்கு ஒரே ஒரு போலீஸ்காரரை மட்டும் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததில் உள் நோக்கம் இருப்பதாக கருதுகிறேன்.
இந்த சம்பவத்துக்கு போலீஸ் துறையின் மெத்தன போக்கே காரணம். தாக்குதலைக் கண்டித்து அமைதியான முறையில் மறியல் நடத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தடியடி நடத்தி கைது செய்கிறார்கள். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
மதுரை மாவட்டம் கோட்டப்பட்டியில் இன்று போலீஸ் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் சுரேஷ் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.
என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார், அதன் பின்னணி என்பது பற்றி அறிய அமர்வு நீதிபதியை கொண்டு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications