ஜப்திக்கு வந்த சப்-கலெக்டர் அலுவலகம்!
புதுக்கோட்டை: கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்காத சப்-கலெக்டர் அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
புதுக்கோட்டை தெற்கு வீதியில் வசிப்பவர் முருகேசன். இவர் நகராட்சியில் தட்டச்சராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் புதுக்கோட்டை மாலையீடு அருகில் உள்ளது.
இந்த நிலத்தை கடந்த 1994ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையினர் ரோடு போடுவதற்கு கையகப்படுத்தினர். ஆனால் நிலத்திற்கு உரிய தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தினர்.
இதனால் நிலத்திற்கு உரிய தொகை வழங்க வேண்டி முருகேசன் நீதிமன்றத்திற்கு சென்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் முருகேசனுக்கு உரிய நிலத்தின் மதிப்பு தொகையான ரூ 64,350யை உடனே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்தனர்.
இதனால் தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை உடனே வழங்க கோரி முருகேசன் விரைவு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் முருகேசனுக்கு உரிய நிலத்தின் மதிப்பு தொகை, மற்றும் அதற்குரிய வட்டித் தொகையாக ரூ. 1,25,387யை உடனே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்தனர். இதனால் மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை முருகேசன் நாடினார்.
இதையடுத்து புதுக்கோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற அமீனா பிச்சைக்குட்டி தலைமையில் ஊழியர்கள் ஜப்தி செய்ய அங்கு சென்றனர்.
அவர்கள் சப்-கலெக்டர் அலுவகத்தில் உள்ள பொருட்களை எடுக்க முயன்றபோது நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பின்பு இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உத்தரவின் பேரில் நீதிமன்றம் குறிப்பிட்ட தொகை காசோலையாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications