ஒகேனக்கல் திட்ட டெண்டரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு

அவர் கூறுகையி்ல்,
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக ஜப்பான் நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த பிப்ரவரியில் தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தினார்.
அப்போது, தமிழக அரசுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால், தேர்தலுக்கு பிறகு இந்த திட்டத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் கருணாநிதி அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு கர்நாடகாவுடன் தமிழக அரசு பேசவில்லை.
இந் நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெண்டர் கோரும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒகேனக்கல் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இந்த திட்டத்தை தடுக்கும்படி மத்திய அரசுக்கு கர்நாடகா விடுத்த கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை.
கர்நாடகாவின் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் நாங்கள் தயக்கம் காட்ட முடியாது. எனவே, ஒகேனக்கல் திட்டத்துக்கு டெண்டர் விடப்படுவதை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவோம். மத்திய அரசு இதையும் புறக்கணித்தால், தமிழக அரசின் டெண்டருக்கு விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார் பொம்மை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications