17ம் தேதி தமிழக-கேரள போக்குவரத்து நிறுத்தம்
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்மலையில் இருந்து கோட்டைவாசல் வரை உள்ள சாலையை சீரமைக்கும் பணி 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து இந்த மார்க்கத்தில் 17ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டம் புளியரையில் தமிழக அரசின் சோதனை சாவடியை தாண்டி கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியிலிருந்து கேரள மாநிலம் புனலூர் செல்லும் முக்கிய சாலை தென்மலை வரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து மத்திய மந்திரி டிஆர் பாலு கோட்டை வாசல் முதல் தென்மலை வரை உள்ள 16 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க ரூ.26 கோடியோ 92 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
இதற்கான பணிகளை தொடங்குவது குறித்து புனலூரில் கடந்த வாரம் நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து செங்கரசுரேந்திரன் எம்பி, புனலூர் எம்.எல்.ஏ கே.ராஜூ, ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவர் அப்துல் காதர் ஆகியோர் சாலையை ஆய்வு செய்தனர்.
தென்மலையில் இருந்து கோட்டைவாசல் வரை உள்ள சாலையை சீரமைக்கும் பணி 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பணி 4 கட்டமாக நடக்கிறது. முதலில் கழுதுருட்டியில் இருந்து தென்மலை வரை நடைபெறும். இதனால் தமிழகத்தில் இருந்து கழுதுருட்டி வரைதான் பெரிய வாகனங்கள் வர முடியும். அதேபோல் கேரளாவில் இருந்து தென்மலை வரைதான் பெரிய வாகனங்கள் வரமுடியும்.
கேரள அரசு மினி பஸ்கள், டெம்போ வேன்கள், ஆம்புலன்ஸ் போன்ற அந்தியவாசியமான வாகனங்கள் ஓரமாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த சாலையில் நாலரை செண்டிமீட்டர் உயரத்திற்கு கற்களும் அதற்கு மேல் இரண்டை சென்டிமீட்டர் உயரத்திற்கு தாரும் போடப்படுகிறது. இந்த பணி முடிவடைய 6 மாதங்கள் ஆகும் என்று ஒப்பந்தக்காரர்கள் கூறி உள்ளனர்.
கூடுமானவரை 3 மாதங்களுக்குள் இந்த பணியை செய்து முடிக்க நாங்கள் வற்புறுத்தி உள்ளோம் என்று செங்கரசுரேந்திரன் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications