மத்திய அரசு நடவடிக்கை திருப்தியில்லை-திருமா
சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இலங்கையில் பேரை நிறுத்த வலியுறுத்தி அந்தக் கட்சியின் மகளிர் அணி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 2,000 பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
அங்கிருந்த திருமாவளவன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
ஈழத்தில் நடந்து வரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகிறோம். மனித சங்கிலி, தொடர் போராட்டங்கள் நடத்தியும் கூட இன்னும் மத்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை என்பது வேதனை.
போரை நிறுத்துமாறு இந்திய அரசு சொல்லவில்லை என்று வெளிப்படையாகவே சிங்கள அரசு அறிவித்துள்ளது.
சிங்கள அரசுக்கு மத்திய அரசின் உதவி இன்னும் நிறுத்தப்படவில்லை. மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் இருப்பது நல்லதல்ல.
ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
உத்தப்புரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு,
மத்திய அரசு நடவடிக்கை திருப்தியாக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த பேச்சுவார்த்தையில் உள்ளிடமாக அவை இருக்கக் கூடும். ஆனால் இதுவரையில் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றார்.
உண்ணாவிரதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் பேசினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications