புகலிடம் கோரிய லேடன் மகன்-ஸ்பெயின் நிராகரிப்பு
ஓசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவர் ஓமர். 20 வயதுகளில் இருக்கும் ஓமர், இங்கிலாந்தைச் சேர்ந்த 50 வயதைத் தாண்டிய ஜேன் பெலிர்ஸ் பிரெளணி என்ற பெண்மணியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் டைவர்சும் செய்தனர்.
தீவிரவாதத்தைக் கைவிடுமாறு தனது தந்தைக்கு கோரிக்கையும் விடுத்தார். அமைதிக்காக பாடுபடப் போவதாகவும் அறிவித்தவர். சவூதி நாட்டு பாஸ்போர்ட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இங்கிலாந்து அரசிடம் புகலிடம் கோரியிருந்தார் ஓமர். ஆனால் அதை இங்கிலாந்து அரசு நிராகரித்து விட்டது. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் புகலிடம் கோரியிருந்தார் ஓமர்.
இதற்காக திங்கள்கிழமை மாட்ரிட் வந்தார் ஓமர். விமான நிலையத்தில் வைத்து அரசியல் புகலிடம் கோரும் மனுவைத் தயாரித்தார். பின்னர் அதை ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இருப்பினும் இந்தக் கோரிக்கையை ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது. அதற்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை. அதேபோல, ஓமர் என்ன காரணத்தைக் கூறி அரசியல் புகலிடம் கோரியிருந்தார் என்பதையும் ஸ்பெயின் அரசு தெரிவிக்கவில்லை.
இருப்பினும் ஓமர் பின் லேடன் அரசியல் புகலிடம் கோரியது தங்களை ஆச்சரியப்படுத்தியதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்













Click it and Unblock the Notifications